மாம்பழத்தில், அதிக வைட்டமின்கள் இருக்கிறது. இந்நிலையில் இது காலை உணவாக எடுத்துக்கொண்டால் ரத்த சர்க்கரை அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் நாம் சில மாற்றங்களை செய்து காலை உணவில் அதை எடுத்துக்கொள்ள முடியும்.
இந்நிலையில் நாம் ஒரு முழு மாம்பழத்தை சாப்பிடுவதற்கு பதில், அளவாக சாப்பிடலாம். இந்நிலையில் ஒரு மாங்காய் 150 கிராம் இருக்கும். உங்களுக்கு ரத்த சர்க்கரை இருந்தால், நீங்கள் ஒட்டுமொத்தமாக கார்போஹைட்ரேட் எடுத்துகொள்ளும் அளவை கவனிக்க வேண்டும்.
இந்நிலையில் மாம்பழங்கள் ரத்த சர்க்கரையை அதிகப்படுத்தும் என்பதால் காலையில் வெறும் வயிற்றில் அதை எடுத்துக்கொள்ளக்கூடாது. காலை உணவாக எடுத்துகொண்டால், மாக்ரோ சத்து கொண்ட உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலை 11 மணி முதல் 12 மணிக்கு இடையில் சாப்பிடலாம். காலையில் நாம் சாப்பிடும் முதன்மையான உணவில் அதிக கார்போஹைட்ரேட் இருந்தால், இது கூடுதல் கலோரிகளை கொடுத்துவிடும்.
மாம்பழங்களை நாம் புரத சத்து மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் கார்போஹைட்ரேட் மெதுவாக ஜீரணமாகும். இதனால் ரத்த சர்க்கரை குறையும். குறிப்பாக கிரீக் யோகர்ட், சீஸ் அல்லது நட்ஸ்யுடன் மாம்பழங்களை சாப்பிட வேண்டும்.
மாம்பழங்களின் கிளைசிமிக் இண்டக்ஸ் மிதமான அளவில் உள்ளது. இது ரத்த சர்க்கரையை சற்று அதிகரிக்கும். ஆனால் இதில் இருக்கும் நார்சத்து, சர்க்கரையை உடல் எடுத்துக்கொள்ளும் வேகத்தை குறைக்கும்.
பழுத்த மாம்பழங்களைவிட பச்சை மாம்பழங்களில் குறைந்த கலோரிகள் உள்ளது. மேலும் இதில் அதிக நார்சத்து, சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
165 கிராம் மாம்பழத்தில், 99 கலோரிகள் உள்ளது. புரத சத்து:1.4 கிராம், கார்போஹைட்ரேட் : 24.7 கிராம், கொழுப்பு சத்து:0.6 கிராம், நார்சத்து: 2.6 கிராம், சர்க்கரை : 22.5 கிராம், வைட்டமின் சி, காப்பர், போலேட், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் இ, வைட்டமின் கே, நாசின், பொட்டாஷியம், ரிபோபிளாவின், மெக்னிசியம், தைமைன், உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“