இந்நிலையில் சமீப காலங்களில் நாம் கொழுப்பு சத்துக்களை அதிகமாக எடுத்துகொண்டால் என்ன செய்வது என்று அச்சம் சமூப நாட்களில் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
குறிப்பாக கொலஸ்ட்ரால் பாதிக்கப்படும் நபர்கள் குறிப்பாக இந்திய மக்கள், அதிகமாக கொழுப்பு சத்தை எடுத்துகொண்டால் என்ன ஆகும் என்பதை தெரிந்திகொள்ள வேண்டும்.
இந்நிலையில் நமது உடலில் உள்ள செல்களுக்கு அடித்தளமாக அமைகிறது கொலஸ்ட்ரால். பல்வேறு செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறது. கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்டராலை எச்.டி.எல் என்று அழைப்போம். கெட்ட கொலஸ்ட்ராலை எல்.டி.எல் என்று அழைப்போம்.
நல்ல கொலஸ்ட்ரால் ஆன எச்.டி.எல் நமது ரத்ததில் உள்ள அதிக கொலஸ்ட்ராலை சேகரிக்கிறது. குறிப்பாக நமது சதைகள், இதய ரத்த கூழாய்களில் இருக்கும் அதிக கொலஸ்ட்ராலை சேகரித்து, கல்லீரலுக்கு அனுப்பி வெளியேற்றுகிறது.
இதுவே கெட்ட கொலஸ்ட்ரால் ஆன எல்.டி.எல் கல்லீரலில் உள்ள கொலஸ்ட்ராலை உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கிறது. இதய ரத்த குழாய்களின் சுவர்களின் இந்த கொழுப்பு படிந்து இதய நோய் வருவதற்கு வழிவகை செய்கிறது.
இதனால் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் வேறுபடுத்தி நான் சாப்பாட்டில் எடுத்துகொள்ள வேண்டும். டிரான்ஸ் கொழுப்பு சத்து, சாச்சுரேடட் கொழுப்பு சத்து, எல்.டி.எல் கொட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
அதிகம் பொறித்த உணவுகள், அதிக கொழுப்பு உள்ள பால் பொருட்கள், இவை கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். உடல் உழைப்பு குறைவாக, புகைப்பழக்கம் அதிகம் இருப்பவர்கள் எல்.டி.எல் அளவு அதிகரிக்கும். அன்சாச்சுட்ரேடட் கொழுப்பு சத்து, குறிப்பாக மோனோ சாச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ளிட்டவை ஆரோக்கியமானது. குறிப்பாக அவக்கடோ, பாதாம், நட்ஸ், விதைகள் மற்றும் கொழுப்பு சத்து உள்ள மீன்கள். எடுத்துக்கொள்ளலாம். அதுபோல மோனோ சச்சுரேடட் கொழுப்பு சத்துக்கள் உள்ள ஆலிவ் ஆயில், வேர்கடலை எண்ணெய், கனோலி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய்யை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil