சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்கள், ஆயுர்வேத முறையில் நோய்யின் தன்மைகளை குறைக்க முடியும்.
வாழ்க்கை முறையில் மாற்றம், உணவு பழக்கத்தில் மாற்றம், மூச்சு பயிற்சி மற்றும் 8 மணி நேரம் தூக்கம் உள்ளிட்டவற்றை நீங்கள் பின் தொடர வேண்டும். இதை தொடர்ந்து பின்பற்றினால், மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாத நிலைக்கு மாறலாம்.
தினமும் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் உடல் எடை அதிகரிப்பு, வீக்கம் மற்றும் உடல் செயல்பாடு குறையலாம். ஆனால் இதை நிரூபிக்க அறிவியல் ஆய்வுகள் இல்லை.
இந்நிலையில் நள்ளிரவில் சாப்பிடுவது போன்ற பழக்கத்தை கைவிட வேண்டும். அதிகமான உணவை எடுத்துக்கொள்ள கூடாது . குறிப்பாக இரவில் அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்ளக் கூடாது. இரவில் நேரம் கழித்து சாப்பிட்டால், அது ரத்த குளுக்கோஸை அதிகரிக்கும். இது நமது ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இதனால் இரவில் நேரம் கழித்து சாப்பிடக்கூடாது.
இந்நிலையில் பசி இல்லாமல் சாப்பிடக்கூடாது. அதுபோல பசி தீர்ந்த பிறகும், கூடுதலாக சாப்பிடக்கூடாது. இந்நிலையில் 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய அளவில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். அதுமட்டுமில்லாமல் கொலஸ்ட்ரால் அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அளவுகள் சிராக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil