scorecardresearch

சுகர் பேஷண்ட்ஸ் பேரிச்சம்பழம் எப்போது சாப்பிடலாம்? நிபுணர்கள் கருத்து என்ன

டைப் 2 சர்க்கரை நோயாளிகள், பேரிச்சம்பழம் சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டாலும், சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில், பேரிச்சம்பழம் சாப்பிடுவதால், ரத்த குளுக்கோஸ் அளவும், உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ராலில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

dates

எப்போதும் டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா ? என்று கேள்வி எழும். மேலும் வெயில் காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடக் கூடாது என்று கூறப்படுகிறது. இதில் இருக்கும் சூடு தன்மையால் சாப்பிடக் கூடாது என்று கூறப்படுகிறது. பேரிச்சம்பழத்தில், புரத சத்து குறைவு. மேலும் இதிலிருந்து வெளிப்படும் சூடு தன்மை நம்மை பாதிக்காது.

டைப் 2 சர்க்கரை நோயாளிகள், பேரிச்சம்பழம் சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டாலும், சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில், பேரிச்சம்பழம் சாப்பிடுவதால், ரத்த குளுக்கோஸ் அளவும், உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ராலில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

சரியான அளவில் பேரிச்சம்பழத்தை எடுத்துக்கொண்டால், உங்கள் சர்கக்ரை அளவு அதிகரிக்காது. சாப்பிட்ட உடன் அதிகரிக்கும் ரத்த சர்க்கரையை அது கட்டுபடுத்தும்.

இந்நிலையில் 100 கிராம் பேரிச்சம்பழத்தில், 60 முதல் 70 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. ஒரு பேரிச்சம்பழத்தில், 40 முதல் 50 கலோரிகள் இருக்கிறது.

இந்நிலையில் இதில் மெக்னிஷியம்,  செலினியம், மான்கனிஸ், நார்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் இருக்கிறது. இந்நிலையில் இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் 75 ஆக உள்ளது. இது கொஞ்சம் அதிகம்தான். இதில் பிரக்டோஸ் அதிகம் இருப்பதால், இதை நாம் அதிகமாக சாப்பிடக் கூடாது.

இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால், இது உணவு செரிமாணத்தை மெதுவாக்கி, பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் குளுக்கோஸ் அளவு ரத்ததில் மெதுவாக கலக்க உதவுகிறது.

நாம் சாப்பிடும் உணவில் பேரிச்சம் பழத்தை எப்படி சேர்த்துக்கொள்வது என்ற குழப்பம் இருந்தால் இதை செய்யுங்கள். நாம் சாப்பிடும் ஒரு சப்பாத்தியில் 80 கலோரிகள் உள்ளது. இந்நிலையில் சப்பாத்தி அல்லது சாதத்தின் அளவை குறைத்துவிட்டு, பேரிச்சம்பழத்தை சாப்பிடுங்கள்.

நன்றாக பேக் செய்யப்பட்ட பேரிச்சம்பழத்தில், நார்சத்து குறைவாக இருக்கும். பேக் செய்யப்படாத 100 கிராம் பேரிச்சம் பழத்தில் 7 முதல் 15 கிராம் நார்த்து இருக்கும். காலையில் வெறும் வயிற்றில்தான் டேட்ஸ் சாப்பிட வேண்டும். அப்போதுதான் நமது ரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Can those with diabetes have dates