scorecardresearch

பச்சை வெங்காயம், கொஞ்சம் மாங்காய்:  இப்படி சாப்பிட்டால் கூடுதல் வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம்

இந்நிலையில் இதுபோன்ற ஹீட் ஸ்டோக்கை தவிர்க்க. வெங்காய சாலட் அல்லது பச்சை மாங்காயில் உப்பு மற்றும் சீரகம் வைத்து சாப்பிட வேண்டும்.

பச்சை வெங்காயம், கொஞ்சம் மாங்காய்
பச்சை வெங்காயம், கொஞ்சம் மாங்காய்

இந்நிலையில் இந்த வெயில் காலத்தில், வெயிலால் ஏற்படும் சிக்கலை நாம் வெறும் தண்ணீர் குடிப்பதால் தவிர்க்க இயலாது. இந்நிலையில் அதிக வெயிலால் ஹீட் ஸ்டோக் வரை வரலாம். இந்நிலையில் ஹீட் ஸ்டோக் வந்தால் வியர்க்காது. உடல் வெப்ப நிலை 106 டிகிரிக்கு செல்லும்.  10 முதல் 15 நிமிடங்களில் வெப்ப நிலை அதிகரிக்கும்.

இந்நிலையில் இதுபோன்ற ஹீட் ஸ்டோக்கை தவிர்க்க. வெங்காய சாலட் அல்லது பச்சை மாங்காயில் உப்பு மற்றும் சீரகம் வைத்து சாப்பிட வேண்டும்.

வெங்காயத்தில் பொட்டாஷியம் மற்றும் சோடியம் இருக்கிறது. இது எலக்ட்ரோலைட் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் இருக்கும் ஆர்கானிக் சல்பர், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். இது ரத்தம் உரைந்து போவதை உடைத்து, ஹீட் ஸ்டோக் வர விடாமல் தடுக்கும்.

பச்சை மாங்காய், சீரகத்தில் வைட்டமின் பி நியாசின், ஆண்டி ஆக்ஸிடண்ட் , நார்சத்து உள்ளிட்டவை  இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.  கூடுதலாக கொலஸ்டாரால் அளவை குறைக்கிறது. மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இந்நிலையில் இது பாரம்பரிய முறையில் கூறப்பட்ட ஒரு முறை மட்டுமே. அறிவியல்பூர்வமாக இந்த முறை ஹீட் ஸ்டோக்கை குறைக்கும் என்பதற்கு  எந்த ஆய்வும் செய்யப்படவில்லை.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Can traditional remedies like onion salad or raw mango with salt and cumin prevent heat stroke