இளநீர் வெயில் காலங்கள் மட்டுமன்றி அனைத்து பருவ நிலைகளிலும் அருந்த தகுதியுள்ள ஒரு பானமாகும். இந்தப் பானத்தில் இயற்கையான மினரல்கள் உள்ளன. வெயில் காலத்தில் உடலின் சூட்டை தணிக்கிறது. உடலின் தட்ப வெப்ப நிலையை சீராக வைக்க பயன்படுகிறது. மேலும், இளநீரில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்றவை கிடைக்கின்றன.
Advertisment
எனினும் இந்தக் காலகட்டத்தில் இளநீர் அருந்துவது கூட ஆபத்தானது என சிலர் கூறுகின்றனர். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கேட்கையில், “இளநீர் தினமும் அருந்துவதால் சிலர் சுகர் அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர்.
ஆனால் அதில் ஆபத்து இல்லை. இளநீரில் சிறிதளவில் சர்க்கரை உள்ளது. ஆகையால் சுகர் பேஷன்கள் குறைந்த அளவில் குடிக்கலாம். ஒருவேளை அதிக அளவில் குடித்தாலும் அதில் ஆபத்து இல்லை. ஏனெனில் பெரிய இளநீரில் கூட 250 எம்.எல். சக்கரைதான் உள்ளது” என்றனர். தொடர்ந்து அதிகாலையில் இளநீர் குடிக்கலாமா? என்ற கேள்விக்கு, “அதில் பிரச்னை எதுவும் இல்லை. தினமும் இளநீர் குடிக்கலாம். ஆனால் அதிகமாக குடிக்கும்போது உடலில் தண்ணீர் அதிகரிக்கும். அதுவும் காலையில் குடித்தால் ஒருவேளை காலை உணவை தவிர்க்கும் நிலை ஏற்படலாம். பொதுவாக உடல் ஆரோக்கியத்துக்கு காலை சிற்றுண்டி மிக மிக அவசியம். அதனால் காலை வேளையில் தேவையான அளவு இளநீர் அருந்தலாம்” என்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/