தாவர உணவுகளில் இருந்து, புரத சத்து கிடைக்காது என்பது ஒரு பொய்யான நம்பிக்கை. தாவரங்களை சாப்பிடும் மாடு, ஆடுகள் எப்படி புரத சத்தை பெருகின்றனர். இந்நிலையில் தாவர வகை புரத சத்து உள்ள உணவுகள், பருப்பு, பீன்ஸ், தானியங்கள், புரொக்கோலியில் புரத சத்து இருக்கிறது.
இந்நிலையில் ஒரு கிலோவிற்கு 0.8 கிராம் என்று வைத்துக்கொண்டால் நமது உடல் எடைக்கு தகுந்ததுபோல் நாம் புரத சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் டோஃபு, பீன்ஸ், நட்ஸ், விதைகள், முழு தானியங்கள், ஓட்ஸ், வேர்கடலை ,பீநெட் பட்டர் ஆகியவற்றிலும் புரத சத்து உள்ளது.
இந்நிலையில் தாவர வகை புரத சத்து சாப்பிட்டால் முழுமையாக புரத சத்து கிடைக்காது என்பது தவறான கருத்துதான். இந்நிலையில் நீங்கள் வெவ்வேறு வகையான உணவுகளை சாப்பிட்டாலே உங்களுக்கு தேவையான அமினோ ஆசிட்ஸ் கிடைத்துவிடும்.
இந்நிலையில் தாவர வகை புரத சத்தில் 20 வகையான அமினோ ஆசிட் இருக்கிறது. இந்நிலையில் இதில் உடலுக்கு தேவையான 9 வகை அமினோ ஆசிடும் இருக்கிறது.
இந்நிலையில் உடலில் உள்ள தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்க விலங்கில் இருந்து கிடைக்கும் புரத சத்துதான் உதவும் என்பதும் தவறு. தாவரவகை புரத சத்தும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்நிலையில் தசைகளை வளர்க்க நாம் தனியாக உடல் பயிற்சி செய்வது முக்கியம்.
இந்நிலையில் புரத சத்து நிறைந்த தாவர வகைகளில் நார் சத்தும் அதிகமாக இருப்பதால், நாம் முழுவதுமாக சாப்பிட்ட ஒரு உணர்வு ஏற்படும். மேலும் கூடுதலாக குடல் ஆரோக்கியத்தை கூடுதலாக்கும். ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.
மாட்டு பாலில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. பீன்ஸ், புரொக்கோலி, மஷ்ரூம், சோயா பீன்ஸ், அத்திப் பழம் ஆகியவை கால்சியம் சத்தையும் வழங்குகிறது.
இந்நிலையில் நாம் மாமிச வகை புரத சத்தை தேர்வு செய்தால், இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து சிக்கலை ஏற்படுத்தலாம், சர்க்கரை நோய்யை கூட ஏற்படுத்தலாம். ஆனால் தாவர வகை புரத சத்தில் இதுபோன்ற அபாயங்கள் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil