மாதவிடாய் வயிற்றுவலி.. மோரில் வெந்தயம் போட்டு அருந்தலாமா? மருத்துவர் பதில்

கோடைக் காலத்தில் உடலுக்கு இதமாக மோரில் வெந்தயம் போட்டு அருந்தலாமா? என்பது குறித்து பார்க்கலாம்.

கோடைக் காலத்தில் உடலுக்கு இதமாக மோரில் வெந்தயம் போட்டு அருந்தலாமா? என்பது குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Can you put fenugreek in buttermilk and drink it

மோரில் வெந்தயம் போட்டு அருந்தலாமா?

தமிழர்கள் தங்களின் உணவுகளில் வெந்தயத்தை பயன்படுத்தினர். இன்றளவும் குழம்பு தாளிக்கும் போது சிறிதளவு வெந்தயம் போடும் பழக்கம் நம்மூர் பெண்களிடம் உள்ளது.
இந்த வெந்தயம் குறித்து மருத்துவர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார். அப்போது அவர், வெந்தயத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் இந்த வெந்தயம், ரத்த சோகைக்கும் நல்ல மருந்தாக பார்க்கப்படுகிறது.

Advertisment

இதுமட்டுமின்றி வெந்தயம் மாதவிடாய் வயிற்று வலியை நீக்கும் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. இந்த வெந்தயத்தை சிறிதளவு சாப்பிட்டுவந்தால் மாதவிடாய் வயிற்றுவலி நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.

மேலும் வெந்தயத்தை பொடி செய்து நீரில் கலந்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறையும். தொடர்ந்து, நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும் இந்த வெந்தயம் பயன்படுகிறது.

Advertisment
Advertisements

தாய்மார்களுக்கு தாய்ப் பால் கிடைக்க வெந்தயக்களி செய்து கொடுக்கலாம். மேலும் மோரில் வெந்தயம் போட்டு குடிக்கலாமா? என சிலர் கேட்கிறேன்.
அதீத குளிர்ச்சி ஏற்படும் எனவும் சிலர் பயப்படுகின்றனர். வெந்தயம் குளிமையான உணவுப் பொருள் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இந்த வெயில் காலத்தில் மோரில் வெந்தயம் போட்டு பருகலாம். இது உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தருவதோடு, கெட்ட கொழுப்புகளை நீக்கும்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: