Advertisment

மாதுளம் பழத்தின் சிவப்பு, உளுந்தின் கருப்பு தோல்... கேன்சரை தவிர்க்க இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

"காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிடலாம். அதாவது, 6 சுவையும் உள்ள கடுக்காய் ஒருபோதும் நோயைக் கொடுக்காது, அதனால் தாயை விட சிறந்தது கடுக்காய் என்று அக்காலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்." என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
cancer prevention foods bys Dr Sivaraman in tamil

"நம்முடைய ஒவ்வொரு வேலை உணவிலும் அதிகம் கவனம் இருக்க வேண்டும். காலையில் கரிசலாங்கண்ணி, தேநீர், ஆவாரம் பூ காஷ்யம் இவற்றை எடுத்துக் கொள்ளவும்." என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

சித்த மருத்துவர் சிவராமன் ஏராளமான மருத்துவ குறிப்புகளை வழங்கி வருகிறார். நாம் அன்றாட உண்ணும் உணவுகளில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து மிகவும் தெளிவாகவும், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் அவர் கூறி வருகிறார். அந்த வகையில்,  கேன்சர் எனப்படும் புற்றுநோயை தவிர்க்கக் கூடிய சில முக்கிய உணவுகள் குறித்து அவர் பகிர்ந்துள்ளார் 

Advertisment

இது குறித்து யூடியூப் வீடியோ ஒன்றில் மருத்துவர் சிவராமன் பேசுகையில், "காலையில் சிறந்த உணவு என்றால் அது நீர் ஆகாரம் தான். தினந்தோறும் தேயிலை காஷ்யம் சாப்பிட்டு வந்தால் அவற்றுக்கு மாற்றாக இஞ்சி நீர் பருகி வரலாம். அவற்றுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்த அது மிகவும் நன்மை பயக்கும். 

சீனாவில் பயன்படுத்தக்கூடிய கலவை என்னவென்றால், இஞ்சி, வெள்ளைப் பூண்டு, எலுமிச்சை பழம் ஆகிய மூன்றும் சேர்ந்த சாறு, அவற்றுடன் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தேன். இந்த ஐந்தும் சேர்ந்த கலவையை காலையில் சாப்பிட்டு வந்தால், அவை உடலில் இருக்கும் பித்தத்தை சமன் செய்கிறது. 

மதியம் சாப்பிடும் போது, ஒரு சிட்டிகை சுக்கு சேர்த்து சாப்பிடலாம். காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிடலாம். அதாவது, 6 சுவையும் உள்ள கடுக்காய் ஒருபோதும் நோயைக் கொடுக்காது, அதனால் தாயை விட சிறந்தது கடுக்காய் என்று அக்காலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். 

ஆண்கள் 50 வயதிற்கும் மேல் உடையவர்களுக்கு புரோஸ்டேட் வீக்கம் இருந்தால், அவை கேன்சராக மாறாமல் தடுப்பதற்கு தக்காளி பழத்தின் தோல் (லைகோபீன்), மாதுளை பழம், வெள்ளை பூசணிக்காய் மற்றும் அதன் விதைகள், வெள்ளரி விதைகள் ஆகியவை பயன்படுகிறது. காய்கறி குறிப்பாக கரிசலாங்கண்ணி, மாதுளை பழம் ஆகியவற்றில் உள்ள சிவப்பு நிறம் புற்றுநோயைத் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சிவப்பு நிறமுடைய காய்கறி, கருப்பு நிறமுடைய அரிசி புற்றுநோய் உருவாகுவதை தடுக்கிறது. தோசைக்கு மாவு ஆட்டும் போது உளுந்து தோலை தூக்கி போட வேண்டாம். அவையும் புற்றுநோய் உருவாகுவதை தடுக்கிறது. 

நம்முடைய ஒவ்வொரு வேலை உணவிலும் அதிகம் கவனம் இருக்க வேண்டும். காலையில்  கரிசலாங்கண்ணி, தேநீர், ஆவாரம் பூ  காஷ்யம் இவற்றை எடுத்துக் கொள்ளவும். 40 வயத்திற்கும் அதிகமானோர், காலையில் சுண்டல், முளைகட்டிய பயிறு வகைகள், காய்கறி துண்டுகள், 2 முட்டை அல்லது ஆம்ப்லேட் இவற்றை சாப்பிட்டு வரலாம். 

11 மணிக்கு பசித்தால் தான் உங்கள் உடல் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அப்போது ஒரு கொய்யாப்பழம், ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களை சாப்பிடலாம். மதியம் சாதம் குறைவாகவும், காய்கறி அதிகமாகவும் சாப்பிட்டு வரவும். 

இரவு உணவு 6:30 மணியில் இருந்து 7 மணிக்குள் முடித்து விடவும். வரகு அரிசி கிச்சடி, கோதுமை ரவை உப்புமா கிச்சடி போன்ற எளிய சீக்கிரம் செரிமாணம் ஆகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் 2 இட்லி, ரசம் சதாம் போன்றவற்றை சாப்பிடலாம் இப்படியான உணவுகள் தான் நமது நலத்திற்கான தேடலாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment