சிம்பிள், சுவையான குடை மிளகாய் புலாவ் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி- 1 கப்
குடைமிளகாய்- 2
வெங்காயம்- 1
தக்காளி - 1
புதினா- 1 கைப்பிடி
கொத்த மல்லித்தழை- 1 கைப்பிடி
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
பெருஞ்சீரகம் – கால் டீஸ்பூன்
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். குடை மிளகாயை சதுரமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இப்போது பாசுமதி அரிசியை நன்கு கழுவி தனியாக எடுத்து வைக்கவும் அல்லது வேண்டும் என்றால் ஊற வைத்து எடுக்கவும்.
அடுத்து அடி கனமான பாத்திரம் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கவும். அடுத்து வெங்காயம் சேர்தது வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்க்கவும். இதன் பச்சை வாசனை போனவுடன் தக்காளி, புதினா, கொத்த மல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
தக்காளி வதங்கியதும் இதனுடன் நறுக்கிய குடைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். அவ்வளவு தான். இப்போது தனியாக குக்கரில் போட்டு வேக வைத்த பாஸ்மதி அரசியை இந்தக் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால் சுவையான குடை மிளகாய் புதினா புலாவ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“