வெரைட்டி ரைஸ் என்றாலே எலுமிச்சை, புளியோதரை, தேங்காய் சாதம் தான் செய்வோம். இந்நிலையில் இந்த குடைமிளகாய் சாதத்தை ஒரு முறை செய்து பாருங்கள். இது பிரைடு ரைசைவிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வேகவைத்த சாதம்
வரமிளகாய்
பூண்டு
எண்ணெய்
கருவேப்பிலை
வெங்காயம்
குடை மிளகாய்
உப்பு, கடுகு
மஞ்சள் தூள்
தக்காளி
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
முதலில் சாப்பாடு செய்து எடுத்து கொள்ளுங்கள். அதிகமாக கொழையாமல், உதிரியாக அவித்து எடுக்க வேண்டும். வரமிளகாய் மற்றும் பூண்டை ஒன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி தக்காளி நறுக்கியதை சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.
Lunch Boxக்கு ஹெல்தியா ஈஸியா செய்து குடுங்க! Lunch Box காலியா தான் வரும் / Capsicum rice in Tamil.
சிறிது நேரம் கழித்து, அதில் வரமிளகாய் பேஸ்டை சேர்த்து 6 முதல் 8 நிமிடங்கள் வரை அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும். இத்துடன் மஞ்சள் பொடியை சேர்த்து வதக்கி இறுதியாக வடித்த சாதத்தை சேர்த்து கிளர வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“