scorecardresearch

சாப்பிட்ட பிறகு ஓமம் சுவைக்கும் வழக்கம் இருந்தா விடாதீங்க… இவ்ளோ நன்மை இருக்கு!

ஓமத்தில் நார்சத்து, மினரல்ஸ், வைட்டமின்கள் இருக்கிறது. ஓமம் நம் செரிமான மண்டலத்திற்கு பெரும் உதவி செய்கிறது. இதில் தைமோல் என்ற பொருள் நமது செரிமான மண்டலத்தில், அதிக என்சைம் சுரக்க உதவுகிறது. மேலு உணவை உடைத்து எளிதில் செரிமாணமாக்க உதவுகிறது.

சாப்பிட்ட பிறகு ஓமம் சுவைக்கும் வழக்கம் இருந்தா விடாதீங்க… இவ்ளோ நன்மை இருக்கு!

நமது சமையலறையில் இருக்கும் ஓமத்தை நாம் குறைத்து மதிப்பிட்டிருப்போம். இந்நிலையில் அதன் நன்மைகள் மிகவும் அதிகம். பொதுவாக சாப்பட்டில் தூவி சாப்பொடும் வழக்கம் பலருக்கு இருக்கும். ஓமத்தில் நார்சத்து, மினரல்ஸ், வைட்டமின்கள் இருக்கிறது. ஓமம் நம் செரிமான மண்டலத்திற்கு பெரும் உதவி செய்கிறது. இதில் தைமோல் என்ற பொருள் நமது செரிமான மண்டலத்தில், அதிக என்சைம் சுரக்க உதவுகிறது. மேலு உணவை உடைத்து எளிதில் செரிமாணமாக்க உதவுகிறது.

சாப்பிட்ட பின் ஓமத்தை சுவைக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இந்த பழக்கம் மிகவும் நன்மை தரும். மேலும் இத்துடன் சீரகம், வெந்தயத்தை சேர்த்து சாப்பிடலாம்.

நாம் அளவுக்கு மீறி உணவு சாப்பிடுவதால், அஜீரணம் ஏற்படுகிறது. மேலும் சரியான அளவில் கார்போஹைட்ரேட், புரத சத்து , கொழுப்பு சத்து  ஆகியவை உணவில் சம அளவில் இருக்க வேண்டும் அப்படி இல்லாதபோதும் அஜீரணம் ஏற்படும்.

இதுபோல அதிக அழுத்தத்தில் நாம் உணவு சாப்பிடும்போதும், அஜீரணம் ஏற்படும். காரம் அதிகமாக சாப்பிடுவதாலும், சரியான இடைவேளையில் உணவு எடுத்துகொள்ளாமல் இருப்பதாலும் அஜீரணம் ஏற்படுகிறது.

அஜீரணம் ஏற்பட்டவுடன் அண்டாசிட் மாத்திரைங்கள் சாப்பிடுவது நல்லதல்ல. இதனால் உங்கள் வயிற்றில் சுரக்கும் ஆசிட் குறைந்து போக வாய்ப்பிருக்கிறது. ஓமத்தை நீரில் போட்டு சுட வைத்து, அந்த நீரை குடித்தால் அஜீரணம் குணமாகும்.

கர்ப்பிணி பெண்களுக்கு, வாந்தி மயக்கம் ஏற்படும்போது, 3 டேபிள் ஸ்பூன் ஓமத்தை நீரில் போட்டு, பாதி சுண்டக் காய்ச்சி மெதுவாக குடித்தால், பலன் தரும்.

மேலும் குடலில் புழு தொல்லை நீங்க ஓமத்தை பயன்படுத்தலாம். ½ டேபிள் ஸ்பூன் ஓமம் மற்றும் வெல்லத்தை கலந்து சாப்பிடலாம். அல்லது ஏலக்காய், வெல்லம் /  தேன் கலந்து டீயுடன் ஓமம் சேர்த்து சாப்பிடலாம். மேலும் ஓமம் மூட்டு வலியை குறைக்கவும் உதவும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Carom seeds useful for digestive system