ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு சிறந்தது. தினமும் கட்டாயம் காய்கறிகள் எடுத்து கொள்ள வேண்டும். குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிப்பர். அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் அடம் பிடிக்கமாட்டார்கள். அந்த வகையில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி குழந்தைகளுக்கு ஏற்ற லஞ்ச் பாக்ஸ் ரெசிபி. கேரட் – பீன்ஸ் சாதம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தக்காளி – 1/2 கப்
அரிசி – 3/4 கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
கேரட் – 2
பீன்ஸ் – 5
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பீன்ஸ், கேரட்டை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்யை ஊற்றி சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதனுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். வதங்கியதும் தாக்காளி விழுது, உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி விட்டு ஊற வைத்த அரிசியையும் சேர்த்து 3 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி வைக்கவும். விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். அவ்வளவு தான் சுவையான, ஹெல்தியான கேரட் – பீன்ஸ் சாதம் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/