நம் வீடுகளில் பெரும்பாலும் காலை, இரவு நேரங்களில் தோசை, இட்லி சமைப்போம். அதற்கு சைட் டிஷ்-ஆக தேங்காய் சட்னி, சாம்பார் என ஏதாவது ஒரு ரெசிபி செய்வோம். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியாக சாப்பிடுவதற்கு புதிதாக தோசை, இட்லி சைட் டிஷ்-ஆக கேரட் சட்னி செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - சிறியது
பூண்டு - 5 பல்
கேரட் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கிய கேரட், தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, 10 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்.
இப்போது ஒரு மிக்ஸியில் வதக்கிய பொருட்களை போட்டு அரைக்கவும். அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் அதே கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும். இதை சட்னியுடன் சேர்த்து கிளற வேண்டும், அவ்வளவு தான் சுவையான கேரட் சட்னி ரெடி.