கண்ணுக்கு ரொம்ப நல்லது... கேரட் சாப்பிட அடம்பிடிக்கும் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுங்கள்
கமகம சுவையில் கேரட் அல்வா பிள்ளைகள் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீடே மணக்கும் சுவையில் இருக்கும். கேரட் சாப்பிட அடம்பிடிக்கும் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுங்கள்.
கமகம சுவையில் கேரட் அல்வா பிள்ளைகள் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீடே மணக்கும் சுவையில் இருக்கும். கேரட் சாப்பிட அடம்பிடிக்கும் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுங்கள்.
கேரட் அல்வா என்பது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். இதை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம். பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறும் சுவையில் கேரட் அல்வா எப்படி செய்வது என்று யம்மிடம்மிஆர்த்திவிலாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பால் நெய் முந்திரிப் பருப்பு துருவிய கேரட் சர்க்கரை ஃபுட் கலர் ஏலக்காய் குங்குமப்பூ
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் 1½ லிட்டர் பாலை சுமார் 20 நிமிடம் நன்கு சுண்டக் காய்ச்சவும். இது அல்வாவிற்கு ஒரு கெட்டியான தன்மையைக் கொடுக்கும். பின்னர், ஒரு பாத்திரத்தில் நான்கு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே நெய்யில், அரை கிலோ துருவிய கேரட்டைச் சேர்த்து, எட்டு முதல் பத்து நிமிடங்கள் நன்கு வதக்கவும். கேரட் மென்மையாகும் வரை வதக்குவது அவசியம். வதக்கிய கேரட்டுடன், நாம் சுண்டக் காய்ச்சிய பாலைச் சேர்த்து, கேரட் பால்லே நன்கு வேகும் வரை சமைக்க வேண்டும். இந்த கலவை சுமார் 20 நிமிடங்களில் கெட்டியாகி வரும்.
இப்போது, தேவையான அளவு சர்க்கரையையும், விரும்பினால் சிறிது ஃபுட் கலரையும் சேர்த்து நன்கு கிளறவும். கலவை கெட்டியாகும்போது, அரை கப் நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறிவிடவும். நெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். நெய் பிரிந்து வருவதுதான் அல்வா சரியான பக்குவத்தில் இருப்பதற்கான அறிகுறி.
இறுதியாக, பொடித்த ஏலக்காய் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து நன்கு கலக்கவும். நாம் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பைப் போட்டு பரிமாறவும். நெய் சொட்டச் சொட்ட சுவையான கேரட் அல்வா இப்போது தயாராக உள்ளது.
இந்த கேரட் அல்வா சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குறைந்த பொருட்களை வைத்து சுவையாக இந்த மாதிரி செய்து கொடுங்கள். கேரட் வேண்டாம் என்று கூறுபவர்கள் கூட இதை செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.