சிலருக்கு இளம் வயதிலேயே முகச் சுருக்கம் ஏற்படும். இதற்கு ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணம்.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது. கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது. கேரட் உடலில் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும் உதவுகிறது.
கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது தவிர, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, வைட்டமின் பி8, வைட்டமின் கே, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் அதிகமாக உள்ளன. கேரட் பொட்டாசியம் நிறைந்த காய்கறி. எனவே, கேரட் நமது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய முக்கியமான காய்கறியாகவும் கேரட் உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/03/13/koxl8TRkydJIDrPAa7w0.jpg)
கேரட் ஜூஸில் உள்ள பீட்டா கரோட்டின் எனும் நிறமி செயல்படுவதற்கு தேங்காய் பால் உடன் சேர்த்து குடிப்பதால் சரும செல்களை சேதமடையால் பாதுகாத்து முகப்பொழிவாக்கும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளதால்,இது உங்கள் உடலில் உள்ள செல் சேதத்தைத் தடுக்கவும், தொற்றுநோயைத் தடுக்கவும் உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பச்சை கேரட்டை விட கேரட் ஜூஸில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. ஆனால் கேரட் ஜூஸ் அதிகமாக குடிப்பது கரோட்டினீமியா என்ற நிலையை ஏற்படுத்தும். அதாவது இரத்தத்தில் பீட்டா கரோட்டின் அளவு அதிகரிப்பதால் தோல் மஞ்சள் நிறமாக மாறும். கேரட் சாற்றை குடிப்பதால் கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவது மட்டுமின்றி கண் ஆரோக்கியமும் மேம்படும். முக்கியமாக கண்புரை, ரிக்கெட்ஸ் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
இதயத்தின் ஆரோக்கியத்திற்கு கேரட் ஜூஸ் மிகவும் நல்லது. தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் பிபி கட்டுப்படும். இது இதயத்திற்கும் மிகவும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள்...