கேரட் ஜூஸ் குடித்து போரடித்து விட்டதாக நினைப்பவர்கள் இனி கேரட் லெஸ்ஸி ட்ரை பண்னுங்க. கண்ணுக்கு மிகவும் நல்லது. நல்ல நிறம் வேண்டும் என்று நினைப்பவர்கள் சட்டென்று கேரட் லெஸி செய்து குடிங்கள்.
தேவையானவை பொருட்கள்
கெட்டித் தயிர்
சர்க்கரை
கேரட்
ஏலக்காய் பொடி
செய்முறை:
முதலில் கேரட்டை சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு நறுக்கி கொள்ள வேண்டும். பின் அதனை சிறு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் விட்டு இறக்கவும்.
பின்னர் குக்கரைத் திறந்து, மிக்ஸியில் போட்டு, பால், சர்க்கரை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் தயிர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மென்மையாக மீண்டும் அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால் கேரட் லஸ்ஸி ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“