இந்த முந்திரி குழம்பு பச்சை முந்திரியை வைத்து செய்யப்படுகிறது. குறிப்பாக நாகர்கோவில், நாசரேத் மற்றும் கேரளாவில் இதை செய்வார்கள்.
தேவையான பொருட்கள்
பச்சை முந்திரி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை
இஞ்சி பூண்டு பேஸ்ட்
நறுக்கிய வெங்காயம் – 2
அரைத்த தக்காளில் அல்லது பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
மஞ்சள் பொடி
மிளகாய் பொடி
மல்லிப்போடி
பெருஞ்சீரகப் பொடி
மிளகு பொடி
செய்முறை: பச்சை முந்திரியை தோல் நீக்கி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில கிராம்பு, பட்டை , பிரியாணி இலை சேர்க்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து இஞ்சி, பூண்டு அரைத்ததை சேர்க்கவும். வெங்காயம் நிறம் மாரியதும் தக்காளி நறுக்கியது அல்லது அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக வதக்க வேண்டும் தற்போது மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, பெருஞ்சீரகப் பொடி, மிளகு பொடி சேர்க்கவும். நன்றாக கிளர வேண்டும் தற்போது பச்சை முந்திரியை சேர்த்து வதக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”