சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கொட்டை வகையான உணவுப் பொருள் முந்திரி.
இந்த முந்திரி குறித்து சில தவறான தகவல்கள் உள்ளன. இதில் கொழுப்பு அதிகம் உள்ளது. இது உடலுக்கு கேடு என அந்தத் தகவல்கள் நீள்கின்றன.
ஆனால் உண்மை அதுவல்ல. முந்திரியில் உள்ள கொழுப்புகள் உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புகள் ஆகும். இதனால் உடல் பலகீனம் குறைந்து ஆரோக்கியம் கூடுகிறது.
அதிலும் பெண்களுக்கு முந்திரி ஒரு அற்புதமான உணவுப் பொருளாகும். பெண்கள் தினமும் ஒரு முந்திரி சாப்பிட்டால் ஈஸ்ட்ரோஜன் அளவு நிலையாக கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் உடலில் ஹார்மோன் அளவை ஊக்குவிப்பதில் முந்திரி முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு முந்திரி கொட்டையில் உள்ள அனாகார்டிக் என்ற அமிலம்தான் காரணம்.
இந்த அமிலம் முந்திரி கொட்டையில் இயற்கையிலேயே மிகுந்து காணப்படுகிறது. இந்த அமிலம் உடலுக்கு மேலும் மேலும் வலு சேர்கிறது.
இந்த அமிலம் ஒரு கைப்பிடி முந்தியில் கிட்டத்தட்ட 20 மில்லி கிராம் வரை காணப்படுகிறது. ஆகவே ஈஸ்ட்ரோஜன் பிரச்னையால் அவதியுறும் பெண்கள் நாளொன்றுக்கு ஒரு முந்திரி என தாராளமாக சாப்பிடலாம்.
எனவே, உங்கள் ஹார்மோன் ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்த ஒரு கால்கப் அளவுக்கு முந்திரி எடுக்க மறக்காதீங்க.!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil