ஆரோக்கிய உணவு வகைகள் உடல் நலத்தை மேம்படுத்தும். சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். நவீன காலத்தில் நமது பாரம்பரிய உணவுகளை சாப்பிடவதை தவிர்த்து விட்டோம். கம்பி, கேழ்வரகு, மரவள்ளிக் கிழங்கு, சோளம் இவைகள் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த உணவுகளை நாம் சாப்பிட மறந்துவிட்டோம். குழந்தைகளுக்கு பிடித்த வகையில் இவைகளை செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள். நம் வீட்டில் அனைவரும் சாப்பிடலாம். அந்தவவையில் மரவள்ளிக் கிழங்கில் மொறு மொறு கோலா உருண்டை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தோல் நீக்கி துருவிய மரவள்ளி – 1 கப்
பொட்டுக்கடலை – ¼ கிலோ
பூண்டு பல் – 10
காய்ந்த மிளகாய் – 3
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பட்டை – 4,
லவங்கம் – 4,
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – ½ கப்,
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
செய்முறை
முதலில் துருவிய மரவள்ளிக் கிழங்கை அடுப்பில் இட்லி பாத்திரத்தில் வைத்து ¾ வேக்காடு வேக வைத்து எடுக்கவும். அடுத்து மிக்ஸியில் பூண்டு, தனியா தூள், மிளகாய், மஞ்சள் தூள், பட்டை, லவங்கம், இஞ்சி எல்லாவற்றையும் போட்டு சிறிது அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும். பின்னர் அதில் பொட்டுக்கடலை, கொஞ்சம் உப்பு போட்டு அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இப்போது இந்த பொட்டுக்கடலை கலவையில் மரவள்ளிக் கிழங்கு துருவல், வெங்காயம், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலைச் சேர்த்து கலக்கவும். உப்பு தேவை என்றால் சேர்த்துக் கொள்ளலாம். மாவு கலவையில் உருண்டை பிடிக்கவும். சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும். உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான், மொறு மொறு மரவள்ளிக் கிழங்கு கோலா உருண்டை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“