கல்யாண வீட்டு ஸ்டைலில் மொறு மொறுப்பான காலிஃப்ளவர் 65 ரெசிபியை இதில் காண்போம். இதனை செஃப் தீனா பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் 3 கிலோ,
கார்ன்ஃபிளவர் மாவு - 5 டேபிள் ஸ்பூன்,
அரிசி மாவு - 5 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி - 100 கிராம்,
பூண்டு 50 கிராம்,
சிக்கன் மசாலா - 50 கிராம்,
மட்டன் மசாலா - 50 கிராம்,
தேவைக்கேற்ப மிளகாய் தூள்,
தேவையான அளவு உப்பு,
3 எலுமிச்சை,
எண்ணெய்.
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை 3 முறை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இதன் மீது எலுமிச்சை சாறு பிழிந்து விட வேண்டும். இதைத் தொடர்ந்து உப்பு, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
இதன் பின்னர், தேவையான அளவு மிளகாய் பொடி, சிக்கன் மசாலா, மட்டன் மசால ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கலந்து விட வேண்டும். இதையடுத்து, கார்ன்ஃபிளவர் மாவும், அரிசி மாவும் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்க வேண்டும். இதன் பின்னர், சிறிதளவு தண்ணீர் தெளித்து மீண்டும் ஒரு முறை இதனை கலக்க வேண்டும்.
இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காலிஃப்ளவரை போட்டு பொறிக்கலாம். இவ்வாறு செய்தால் மொறு மொறுப்பான காலிஃப்ளவரை 65 தயாராகி விடும்.