நிறைய பேர் காலிஃபிளவர் சாப்பிட கூடாது. உடலுக்கு கேடு விளைவிக்கும் என்றெல்லாம் சொல்வார்கள் ஆனால் உண்மையில் காலிஃபிளவர் எப்படி சாப்பிட வேண்டும் அதில் உள்ள நன்மைகள் பற்றி மருத்துவர் இளவரசி தனது யூடியூப் பக்கமான ஆஸ்க் டாக்டர் இளா பக்கத்தில் கூறியிருப்பதாவது,
காலிஃப்ளவரில் இரண்டு சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும், மெக்னீசியமும் உள்ளது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
மேலும் இதில் முட்டைக்கு சமமான கோலின் சத்தும் உள்ளது. சாப்பிட்ட பிறகு வேறு எதாவது உணவு சாப்பிட வேண்டும் என்ற தன்மையை போக்கும். அதனால் உடல் எடை இழப்பிற்கும் உதவுகிறது.அதேமாதிரி இந்த காயை சமைக்கும் மற்றும் சுத்தப்படுத்தும் முறையும் உண்டு.
டிப்ஸ் 1: குளிர்ந்த நீரில் அல்லது பைப் தண்ணீரில் காலிஃப்ளவரை நறுக்கி போட்டு கழுவி சமைக்க ஆரம்பிக்கலாம். சுடுதண்ணீரில் போட்டு சுத்தம் செய்தால் பாதி சத்துக்கள் நீரிலேயே போய்விடும்.
டிப்ஸ் 2: பின்னர் காலிஃப்ளவரை ஒரு கடாயில் போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வறுத்து சாப்பிடலாம்.
கொழுப்பை கரைக்கும் காலிஃபிளவர் !!
டிப்ஸ் 3: மூன்றாவது முறை இதை அவனில் வைத்து வேக வைத்து உப்பு மிளகு தூள் போட்டு சாப்பிடலாம். இந்த வகையில் சாப்பிடும் போது மட்டும்தான் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
காலிஃப்ளவரை சிறிது சிறிதாக ரைஸ் மாதிரி பிளண்ட் பண்ணி வதக்கி காலிஃபிளவர் ரைஸ் மாதிரி சாப்பிடலாம்.
மேலும் காலிஃப்ளவரில் லோக கேலரிஸ்தான் உள்ளது. அதனால் இதனை காலிஃப்ளவர் உப்புமா கிச்சடி மாதிரி செய்து சாப்பிடலாம். முக்கியமாக காலிஃப்ளவரை வறுத்து சாப்பிடக்கூடாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.