சமைத்து வேண்டாம் என்று தூக்கி போடக்கூடிய காலிஃபிளவர் தண்டு வைத்து டேஸ்டியான காலிஃபிளவர் தண்டு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் தண்டு
புளி கரைசல்
துவரம் பருப்பு
கருவேப்பிலை
மஞ்சள் தூள்
ரசப்பொடி
மிளகுத்தூள்
சீரகப்பொடி
பெருங்காயத்தூள்
கொத்தமல்லி தழைகள்
எண்ணெய்
கடுகு
சீரகம்
காய்ந்த மிளகாய்
செய்முறை
காலிஃபிளவர் தண்டின் சைடு பகுதியில் உள்ள இலைகளை நறுக்கிவிட்டு அந்த தண்டை எடுத்து கழுவி துண்டாக நறுக்கி சிறிது நேரம் வேக வைத்து நீர் வடித்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் புளி கரைசல் மற்றும் துவரம் பருப்பு வேகவைத்து எடுக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் சிறிது கருவேப்பிலை மற்றும் காலிஃப்ளவர் தண்டை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் புளிக்கரைசலை சேர்த்து மஞ்சள் தூள், ரசப்பொடி, மிளகுத்தூள், சீரகப்பொடி, பெருங்காயத்தூள் சிறிது தண்ணீர் சேர்த்து நுரை பொங்கியதும் அரைத்து வைத்துள்ள காலிபிளவர் தண்டையும் சேர்த்து அதனுடன் பருப்பு சேர்த்து வேக வைக்கவும்.
Cauliflower Stem Rasam | காலி பிளவர் தண்டு ரசம்
பின்னர் நுரை கட்டியதும் கொத்தமல்லி தழைகளை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கலாம். பின்னர் இதனை தாளிக்க எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் அடுப்பை அணைத்து அதில் சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து சிறிது கருவேப்பிலை சேர்த்து ஒரு கிளறு கிளறி அந்த ரசத்தில் கொட்டி சிறிது நேரம் மூடி விட்டு பின்னர் எடுத்து பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“