சுவையான காலிஃப்ளவர் சூப் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
நறுக்கிய காலிஃப்ளவர்- ஒன்றரை கப்
வெண்ணெய் _ 25 கிராம்
வெங்காயம் - 1
காய்ச்சிய பால் _ அரை கப்
காய்கறித்தாள் - ஒரு துண்டு
மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் வெங்காயத்தையும், பாதி காலிஃப்ளவரையும் நறுக்கி சிறிது உப்பு சேர்த்து தண்ணீரில் இதை நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் சிறிது வெண்ணையை சூடாக்கி வெங்காயம், ,காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். தண்ணீர் ஊற்றிவும். ஒரு விசில் வரும் வரை வதக்கவும். பின்பு ஒரு கப் பால், உப்பு, சோளமாவில் ஒன்றரை டேபிள் ஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
நன்கு கலந்து விட்டு சூடாக்கவும். அதில் தேவையான அளவு மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான காலிஃப்ளவர் சூப் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“