சுவை நிறைந்த மொறு மொறு காலிஃபிளவர் பருப்பு வடை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்
தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் – 1 கப்
கடலை பருப்பு – அரை கப்
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
செய்முறை
முதலில் கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து கழுவி 2 மணிநேரம் வரை ஊறவைத்த பின் மிக்சியில் போட்டு அதனுடன் சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து தனித்தனியாக எடுத்து நறுக்கி கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் சிறிதாக நறுக்கிய
காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்து கொள்ளவும்.
அடுத்ததாக, மற்றொரு பாத்திரம் எடுத்து காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அவ்வளவு தான் வடை செய்ய மாவு ரெடி.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான சூடான மொறு மொறு காலிஃபிளவர் பருப்பு வடை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“