Advertisment

சுண்டல், கீரை: சத்தான கட்லெட் இப்படி செய்யுங்க!

வெள்ளை சுண்டல் கீரை கட்லெட் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
ராகி சேமியாவில் சத்தான கட்லெட்.. சிம்பிள் ரெசிபி இதோ!

cutlet recipe

வெள்ளை சுண்டல் கீரை கட்லெட் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டைக் கடலை -200 கிராம்

கீரை – 1 கட்டு (ஏதேனும் வகை கீரை)

வெங்காயம் – 100 கிராம்

உருளைக் கிழங்கு– 150 கிராம்

உப்பு – தேவையான அளவு

சீரகம்- ½ ஸ்பூன்

பச்சை மிளகாய் – 6

எண்ணெய் – 200 கிராம்

செய்முறை

கொண்டைக் கடலையை வேகவைத்து தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து அரைத்து அத்துடன் வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு, நறுக்கிய கீரை, வெங்காயம் சேர்த்து நன்கு பிசையவும். இப்போது சிறு சிறு வடிவங்களில் தட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான வெள்ளை கொண்டைக் கடலை கீரை கட்லெட் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment