சப்பாத்திக்கு சைட் டிஷ் வெண்டைக்காய் மசாலா.. இந்த புது காம்போ ட்ரை பண்ணலாமா?

சப்பாத்தி உடன் சாப்பிட ஏற்ற வகையில் வெண்டைக்காய் மசாலா எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

சப்பாத்தி உடன் சாப்பிட ஏற்ற வகையில் வெண்டைக்காய் மசாலா எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
சப்பாத்திக்கு சைட் டிஷ் வெண்டைக்காய் மசாலா.. இந்த புது காம்போ ட்ரை பண்ணலாமா?

சப்பாத்தி, பூரி உணவுகள் பெரும்பாலானோருக்கு பிடிக்கும். பூரிக்கு உருளைக்கிழமை மசால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் சப்பாத்திக்கு விதவிதமான சைட் டிஷ் செய்யலாம். சிக்கன் கிரேவி உடன் சாப்பிடலாம். பன்னீர் பட்டர் மசாலாவுடன் சாப்பிடலாம். சிலர் பருப்பு வைத்து சாப்பிடுவர். எப்போதும் இந்த காம்போவில் சாப்பிடுபவர்களுக்கு, இப்போது புதிதாக சப்பாத்தி உடன் வெண்டைக்காய் மசாலா வைத்து சாப்பிட்டு பாருங்கள். ரெசிபி இதோ.

Advertisment

தேவையான பொருட்கள்

பிஞ்சு வெண்டைக்காய் - 1/2 கிலோ

முந்திரி பேஸ்ட் - 1 கப் ( முந்திரியை வேகவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்)

Advertisment
Advertisements

அரைத்த தேங்காய் - 1 கப்

நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

தக்காளி பேஸ்ட் - 2 கப் (தக்காளியை சுடு தண்ணீரில் வேகவைத்து தோலுரித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 துண்டு

மல்லித்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

வெண்ணெய் - 1/4 கப்

எண்ணெய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

வெண்டைக்காயை கழுவி, தண்ணீர் இல்லாமல் துணி வைத்து துடைத்து நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்கி எடுத்துக் கொள்ளவும். அடுத்து, அதே கடாயில் வெண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி பின்னர் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி எடுக்கவும். அடுத்து பட்டை, தக்காளி பேஸ்ட், முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

இப்போது, மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வெண்டைக்காய் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 2 நிமிடம் மூடி வைத்து பின்னர் இறக்கவும். அவ்வளவுதான், சப்பாத்திக்கு சுவையான வெண்டைக்காய் மசாலா சைட் டிஷ் ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: