வழக்கமாக பலரது வீடுகளில் இரவு டின்னருக்கு சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். கோதுமை உணவுகள் சாப்பிடுவது நல்லது. சப்பாத்தி பலரும் விரும்பி சாப்பிடுவர். ஆரோக்கியமான உணவு முறைகள் உடல் நலத்திற்கு சிறந்தது. வீடுகள் செய்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படி, வீட்டிலேயே
ஈஸியாக சாண்ட்விச் செய்யலாம். இரவில் சுட்ட சப்பாத்தி வைத்து காலையில் சாண்ட்விச் செய்யலாம். காலை வேலைக்கு செல்பவர்கள் சீக்கிரம் செய்து சாப்பிடலாம். காய்கறிகள் சேர்ப்பதால் ஆரோக்கியமானதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
சப்பாத்தி - 4
சோளம் - 1/4 கப்
முட்டைக்கோஸ் - 1/2 கப்
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மயோனைஸ் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
கேப்சிகம் - 1/2 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
சீஸ் - 4 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், அதில் வெங்காயம், கேப்சிகம் மற்றும் சோளம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு கொஞ்சம் சேர்க்கவும். பின்னர் 2-3 டீஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். அடுத்து, முட்டைக்கோஸ் சேர்த்து சிறிது நேரம் வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிடவும். இந்த காய்கறி கலவையில் தக்காளி சாஸ் மற்றும் மயோனைஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது சப்பாத்தியை சாண்ட்விச் பிரட் போல் மடக்கி, காய்கறி கலவையை எடுத்து நிரப்பவும். அதன் மீது சீஸ் வைத்து, சப்பாத்தியை இரண்டாக மடக்கவும். அடுத்து, தோசை கல்லில் சிறிது வெண்ணெய் தடவி, காய்கறி கலவைகள் நிறைந்த சப்பாத்தி சாண்ட்விச்சை வைத்து பொன்னிறமாகும் வரை இருபுறமும் திருப்பி போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சப்பாத்தி சாண்ட்விச் ரெடி.
உடல் எடை கட்டுக்குள் வைக்க விரும்புபவர்கள் மாயோனைஸ் தவிர்த்து விட்டு, ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil