கோதுமை மாவு பிசையாமல், சப்பாத்தி போட முடியும். இந்நிலையில் டுடேஸ் சமையல் சேனலின் வீடியோவில் எப்படி செய்வது என்பதை பகிர்ந்துள்ளனர். அதன் தொகுப்பு இது.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
ஒரு டேபிள் ஸ்பூன் பூண்டு நறுக்கியது
கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி
கால் டீஸ்பூன் கரம் மசாலா பொடி
கால் டீஸ்பூன் சீரகப் பொடி
அரை டீஸ்பூன் தனி மிளகாய் பொடி
கால் டீஸ் பூன் கொத்தமல்லி பொடி
உப்பு
கருவேப்பிலை இலை
கொத்தமல்லி
தண்ணீர்
வெண்ணை
செய்முறை: இரண்டு கப் கோதுமை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிதாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும். மஞ்சள் பொடி, கரம் மசாலா, சீரகப் பொடி, மிளகாய் பொடி, கொத்தமல்லி, கருவேப்பிலை உப்பு சேர்க்கவும். கிட்டதட்ட கோதுமை தோசை அளவுக்கு மாவை நாம் கரைத்துகொள்ள வேண்டும். இந்த மாவின் ஒரு கரண்டியை நான்ஸ்டிக் தவாவில் ஊற்றி அதை தோசை போல வட்டமாக்காமல், மொத்தமாக வேக வைக்க வேண்டும். தொடர்ந்து அடுத்த பக்கம் திருப்பி போடவும். இதுபோல இரண்டு முறை செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் சாப்பாத்தி போல் வரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“