சப்பாத்தி, பூரி உணவுகள் பலருக்கும் பிடித்த உணவு. இதற்கு எப்போதும் சைட் டிஷ் ஆக உருளைக்கிழக்கு மசால் அல்லது குழம்பு செய்வோம். எப்போதும் ஒரே மாதிரியான உணவு சாப்பிடுவது சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் போர் அடித்து விடும். விதவிதமான ரெசிபி ட்ரை செய்வது ஒரு புது அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். பேபி கார்ன் குழந்தைகளுக்கு பிடிக்கும். அதில் குழம்பு செய்தால் எப்படி இருக்கும்? சப்பாத்திக்கு சுவையான பேபி கார்ன் கிரேவி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க
பேபி கார்ன் – 50 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
பட்டை – 1
கிராம்பு – 1
ஏலக்காய் – 2
வரமிளகாய் – 4
பூண்டு – 4 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
அரிசி – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
தாளிக்க தேவையானவை
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை , கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் பேபி கார்னை நன்கு கழுவி எடுக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரம் எடுத்து தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து பேபி கார்னை அதில் போட்டு அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அடுத்து மேலே வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுது போல் அரைத்து எடுக்கவும்.
அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்குங்கள். அடுத்து சிறிது மஞ்சள் தூள் போடவும். அனைத்தும் வதக்கியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்த விழுது சேர்த்து கலந்துவிட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். இப்போது வேக வைத்த
பேபி கார்ன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சப்பாத்திக்கு சுவையான பேபி கார்ன் கிரேவி ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/