நாம் பலமுறை சாப்பாத்தி செய்தாலும் வட்டமாகவும் அதே நேரத்தில் மிருதுவாக வராது. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து குழம்பி இருப்பீர்கள்.
இந்நிலையில் நாம் சில வழிமுறைகளை பின்பற்றினால் மிருதுவாக சப்பாத்தியை செய்ய முடியும். முதலில் சப்பாத்தி மாவை பிசையும்போது மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீர் அல்லது பால் பயன்படுத்த வேண்டும். கூடுதலாக மாவு பிசையும்போது நன்றாக அழுத்தி பிசைய வேண்டும்.

மேலும் எண்ணெய்யை மாவு பிசையும்போது ஊற்ற வேண்டும். மேலும் சின்ன சின்ன பந்துகள் போல பிசைந்த மாவை பிடித்து வைக்க வேண்டும் அதன் மீது எண்ணெய் சிறிது ஊற்ற வேண்டும். 30 நிமிடங்களாவது சாப்பத்தி மாவை ஊறவைக்க வேண்டும்.
மேலும் சப்பாத்தி சுடும்போது அதிக தீயில் சுட கூடாது. உங்கள் பர்னர் மிதமான தீயில் இருக்க வேண்டும். மேலும் ஒரு பக்கம் உப்பி வரும்போது அதை ஸ்பூனால் அமுக்கி விட வேண்டும். மெதுவாக அமுக்கிவிட வேண்டும் .

அதுபோல நெய் பயன்படுத்தினால் சப்பாத்தி மாலை வரை மிருதுவாக இருக்கும். கூடுதலாக சப்பாத்தி மிருதுவாக இருக்க வேண்டும் என்றால் அலுமினிய தாளில் மடக்கி வைத்து கொள்ளுங்கள்.

சிப் பேங்கில் சாப்பாத்தி போட்டு வைத்துவிட்டு தேவைபடும் போது மீண்டும் சுட வைத்து சாப்பிடலாம். இப்படி செய்தால் 1 வாரம் வரை சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.