Advertisment

உடல் எடையை குறைக்க சப்பாத்தி ஓகே… ஆனா இந்த மாவு வகைகளை பயன்படுத்துங்க

வெள்ளை சாதத்தைவிட கோதுமை சப்பாத்தி நல்ல தேர்வாக இருந்தாலும், அது உடல் எடையை குறைக்க உதவாது. இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது ஆரோக்கியமான ஆட்டா வகைகளை நாம் பயன்படுத்தலாம். இது பற்றி விரிவாக பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உடல் எடையை குறைக்க சப்பாத்தி ஓகே… ஆனா இந்த மாவு வகைகளை பயன்படுத்துங்க

நாம் உடல் எடையை குறைக்க வெள்ளை சாதத்தை தவிர்த்து சப்பாத்தி சாப்பிடுவோம். ஆனால் கோதுமை மாவில் செய்யும் சப்பாத்தியில் அதிகம் கார்போஹைடேர்ட் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெள்ளை சாதத்தைவிட கோதுமை சப்பாத்தி நல்ல தேர்வாக இருந்தாலும், அது உடல் எடையை குறைக்க உதவாது. இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது ஆரோக்கியமான ஆட்டா வகைகளை நாம் பயன்படுத்தலாம். இது பற்றி விரிவாக பார்ப்போம்.

Advertisment

கம்பு ஆட்டா

சிறுதானிய வகைகளில் ஒன்றான கம்பு உடலுக்கு மிகவும் நன்மை தரும். இதில் புரத சத்து, நார்சத்து, மாக்னிஷியம், இரும்பு சத்து இருக்கிறது. உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் சீரனத்தை விரைவுபடுத்துகிறது. கூடுதலாக உடல் வளர்சிக்கு துணையாக இருக்கிறது.

சோள மாவில் ஆட்டா

இதில் கால்ஷியம், ரிபோஃபிலாவின், இரும்புசத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இதைத்தான் தேர்வு செய்ய வேண்டும். தினமும் இதை உணவில் சேர்த்துகொண்டால் ரத்தில் சக்கரையின் அளவை குறைக்கும். அதிகரிக்காமல் பார்த்துகொள்ளும். உங்களுக்கு இது சரியாக செரிமானமாகவில்லை என்றால் கோதுமை மாவுடன்  கலந்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

ராகி ஆட்டா

ராகியை பற்றி தனியாக கூற வேண்டும் என்பதில்லை. இதில் இரும்பு சத்து, அமினோ ஆசிட், ஆன்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதை வைத்து ரொட்டி செய்து சாப்பிட்டால் அதிகம் நேரம் பசி எடுக்காது. இதில் குறைந்த காலோரிகளை உள்ளதால்  உடல் எடையை சில வாரங்களிலே குறைக்க முடியும் . ராகி ஆட்டாவை , கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி செய்யலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment