சப்பாத்தி கடினமாக வருவதற்கு சில காரணங்கள் இருக்கிறது. இந்நிலையில் நாம் அடிக்கடி சப்பாத்தி போட்டாலும், அது வட்டமாகவும், மிரதுவாக வராமல் இருக்கும். இந்நிலையில் சில விஷயங்களை நாம் சரியாக பார்க்க வேண்டும்.
தண்ணீர் மற்றும் மாவின் அளவு
இந்நிலையில் தண்ணீர் மற்றும் மாவின் அளவு மிகவும் முக்கியம். இந்நிலையில் இதில்தான் அதிகம் பேர் தவறு செய்வார்கள். குறிப்பாக அதிக தண்ணீர் சேர்த்தால், மாவை வட்டமாக சப்பாத்தி போட முடியாது. மேலும் தண்ணீர் குறைவாக இருந்தாலும், சப்பாத்தி மாவு கடினமாக மாறிவிடும். இதனால் 2 கப் மாவிற்கு ஒரு ½ கப் தண்ணீர் சரியாக இருக்கும்.
இந்நிலையில் மாவை நாம் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரையாவது மாவை ஊற வைக்க வேண்டும்.
தொடர்ந்து மாவை நாம் தேய்க்கும்போது மெலிசாக தேய்க்க கூடாது. எல்லா இடங்களிலும் சீராக இருக்க வேண்டும். இதனால் இது வேகும்போதும் சீராக இருக்கும்.
இந்நிலையில் சப்பாத்திகளை சுடும்போது முதலில் தீயை மிதமாக வைத்துக்கொள்ளவும். தொடர்ந்து தீயின் அளவை கூட்டி இரு பக்கவும் ஒரே மாதிரி வேக வைக்க வேண்டும்.
மேலும் சாப்பத்திகளை ஹாட் பாக்ஸில் போட்டு வைத்தால், மட்டுமே அதிக நேரம் மிரதுவாக இருக்கும்.