சாலட், சமோசா என பெரும்பாலான சாட் ஸ்நாக்ஸ் வகைகளில் சாட் மசாலா பயன்படுத்துவது ருசியை சற்று கூட்டி கொடுக்கும். இப்படியான, சாட் மசாலாவை இனி கடையில் வாங்காமல் வீட்டிலேயே தயார் செய்து எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சீரகம் - 1/4 கப்
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
புதினா - 5 முதல் 7 இலைகள்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
அம்சூர் பவுடர் (மாங்காய் தூள்) - 1 முதல் 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
கல் உப்பு - 1 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
மிதமான சூட்டில் ஒரு கடாயில் சீரகம் சேர்த்து மணம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் மாற்றி வைக்கவும். அதன் பிறகு மிளகு, புதினா இலை என ஒவ்வொன்றாக தனித்தனியாக வறுத்து தட்டிற்கு மாற்றவும்.
இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, கடாயில் இருக்கும் சூட்டில் கல் உப்பு, கருப்பு உப்பு, சுக்குப்பொடி, பெருங்காயம், மாங்காய் தூள், மிளகாய் தூள் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
பின்னர் அனைத்து பொருட்களும் நன்கு ஆறியதும், ஒரு மிக்ஸி ஜாரில் இதனை சேர்த்து நன்கு மைய அரைத்தால் சாட் மசாலா ரெடியாகிவிடும். இனி வீட்டில் செய்யும் பஜ்ஜி, பக்கோடா, சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ்க்கு வீட்டில் செய்த சாட் மசாலாவையே பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“