குழந்தைகளுக்கு பூரி என்றாலே பிடிக்கும். அதுவும் சீஸ் சேர்த்தால், கூடுதல் சுவையாக இருக்கும். சுவையான சீஸ் மசாலா பூரி இப்படி செய்யுங்க.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 1 கப்
ரவை – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
மேலும் சில பொருட்கள் உள்ளே வைப்பதற்கு
துருவிய சீஸ் – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மற்றொரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்
சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூடி அதை மீண்டும் தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று மீதம் உள்ள மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், யம்மியான சீஸ் மசாலா பூரி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“