தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு – 3
துருவிய பன்னீர் – 1 கப்
பிரெட் ஸ்லைஸ் – 4
நறுக்கிய கொத்தமல்லி – கால் கப்
பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன்
இஞ்சித் துருவல், மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கேரட் – 1
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பிரெட் துண்டுகளை சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன்பின், ஒரு பாத்திரத்தில் வேக வைத்து மசித்த உருளைக் கிழங்குடன் பிரெட் துண்டுகள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகாய்த் தூள், இஞ்சித் துருவல், துருவிய பன்னீர் ஆகியவற்றை சேர்க்கவும்.
இதிலிருந்து சிறிதளவு எடுத்து வட்டமாக தட்டவும். நடுவில் கேரட் துருவலை வைத்து மூடி, விரல் நீளத்தில் உருட்டிக் கொள்ளவும். இதேபோல் எல்லாவற்றையும் செய்யவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தயாரித்து வைத்துள்ள ரோல்களை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பன்னீர் ரோல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“