மாலை நேரத்தில் காபி, டீ-யுடன் சூடாக ஏதாவது சாப்பிட விரும்புவோம். குழந்தைகளும் பள்ளி முடிந்து வந்தவுடன் ஸ்நாக்ஸ் கேட்பார்கள். எப்போதும் வழக்கமாக செய்து கொடுப்பதற்கு பதிலாக புதிதாக ஏதாவது ட்ரை செய்து பாருங்க. உங்களுக்கும், குழந்தைகளுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த வகையில் ஆம்லெட் சீஸ் சாண்ட்விச் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சாண்ட்விச் பிரெட் - 4
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
சீஸ் ஸ்லைஸ் - விருப்பத்திற்கேற்ப
சில்லி ஃபிளேக்ஸ் - விருப்பத்திற்கேற்ப
வெண்ணெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
முட்டை - 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக 2 பிரெட் துண்டுகளை எடுத்து அதில் ஒன்றின் மீது சீஸ் ஸ்லைஸ் வைத்து, சில்லி ஃபிளேக்ஸ் தூவவும். அதன் மீது மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது அடுப்பில் தவா வைத்து சூடானதும், பிரெட் ஸ்லைஸ் வைக்கவும். வெண்ணெய் சுற்றி ஊற்றவும். இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யவும். முட்டை கலவையை ஊற்றவும். பொன்னிறமாக வேக விடவும். அவ்வளவு தான் அடுப்பில் இருந்து எடுத்து கட் செய்து பரிமாறலாம். சுவையான, சூடான ஆம்லெட் சீஸ் சாண்ட்விச் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/