தேவையானவை
கோதுமை மாவு – அரை கப்
துருவிய பன்னீர் – 50 கிராம்
பால் – அரை கப்
பச்சை மிளகாய் – 2
வெங்காயம்- 1
குடை மிளகாய் – ஒன்று
கேரட் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
சீஸ் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – தேவையான அளவு
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு
நெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
பச்சை மிளகாய், வெங்காயம், குடை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். கோதுமையை பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும். இதனுடன் துருவிய பன்னீர், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், கொத்தமல்லித் தழை, கேரட் துருவல், சீஸ் துருவல் ஆகியவற்றை கலந்து வைக்கவும்.
தோசைக் கல்லில் நெய் தடவி கோதுமை – பன்னீர் கலவையை சற்று கனமாக ஊற்றி மேலும் சிறிது நெய் விட்டு, அதன் மீது காய்கறி – சீஸ் கலவையை தூவி ஒரு மூடி போட்டு வேக விடவும். வெந்ததும் அதன் மீது தக்காளி சாஸை லேசாக தடவினால் சுவையான சீஸ், காய்கறிகள் சேர்த்த ஆம்லெட் ரெடி.