/indian-express-tamil/media/media_files/2025/04/23/aVI8pRLWyZs4TEI6oXNp.jpg)
சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
மிகவும் சீக்கிரமாக சமைக்காமலேயே ரசத்தை செய்துவிடலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா பெரும்பாலானோருக்கு ரசம் கொதித்து விடுமோ என்ற பயத்திலேயே பக்கத்திலேயே நின்று சமைத்துக் கொண்டு இருப்பார்கள் ஆனால் ரசத்தை இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க நெருப்பும் தேவையில்லை தாலிப்பும் தேவையில்லை டக்குனு செய்துவிடலாம்.
சுவையான பச்சைப்புளி ரசம் எப்படி செய்வது என்று செக் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம்
பூண்டு
கருவேப்பிலை
கொத்தமல்லி
பெரிய வெங்காயம்
மிளகுத்தூள்
பெருங்காயத்தூள்
சீரகத்தூள்
தேங்காய் எண்ணெய்
புளிகரைசல்
உப்பு
செய்முறை
முதலில் பச்சை மிளகாய் நெருப்பில் வாட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயத்தையும் இடித்து வைக்கவும். அதேபோல பூண்டையும் மெல்லிசாக அறுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் இவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
அதோடு கருவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய பெரிய வெங்காயம், மிளகுத்தூள், பெருங்காயத்தூள், சீரகத்தூள், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை விட்டு கலந்து விடவும். நன்கு கலந்ததும் தண்ணீர் சேர்க்காத புளிக்கரைசலை கெட்டியாக எடுத்த அதில் ஊற்றி கை வைத்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் ரசத்திற்கு தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்தால் அவ்வளவுதான் சுவையான பச்சை புளி ரசம் ரெடி ஆகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.