ஒரு முறை செப் பட் சொல்வது போல் பெரி பெரி பன்னீர் ஃப்ரைட் ரைஸ் வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் பட்டர்
1 டம்ளர் பாஸ்மதி அரிசி அவித்தது
1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு
2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்
2 ஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய்
3 நிறத்தில் உள்ள குடைமிளகாய் நறுக்கியது 3 ஸ்பூன்
அரை ஸ்பூன் மிளகுத் தூள்
பெரி பெரி பவுடர் முக்கால் டீஸ்பூன்
1 ஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
அரை ஸ்பூன் வெள்ளை மிளகு பொடி
பன்னீர் 200 கிராம் நறுக்கியது
தேவையான உப்பு
1 டீஸ்பூன் சோயா சாஸ்
செய்முறை : உதிரியாக இருக்கும்படி பாஸ்மதி அரிசியை நன்றாக வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பட்டர் சேர்க்கவும். தொடர்ந்து பூண்டு, சேர்த்து கிளரவும். வெங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து குடைமிளகாய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகு தூள், பெரி பெரி பவுடர், சில்லி பிளேக்ஸ் . வெள்ளை மிளகு பொடி சேர்க்கவும். தொடர்ந்து இதில் பன்னீர் நறுக்கியதை சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். சோயா சாஸ் சேர்த்து கிளரவும். அடுப்பை அணைத்துவிட்டு அவித்த சாதத்தை சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“