செப் தாமு செய்வது போல் காரைக்குடி கருவேப்பிலை குழம்பு செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – ஒரு ஸ்பூன்
துவரம்பருப்பு – ஒரு ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – 50 கிராம்
உப்பு – ஒரு ஸ்பூன்
புளி – எலுமிச்சை பழ அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
செய்முறை
முதலில் கறிவேப்பிலையை நன்கு கழுவி உலர வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதை தனியாக எடுத்து வைக்கவும். பிறகு அதே கடாயில் வர மிளகாய், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் மிளகு சேர்த்து மிதமான தீயில், அனைத்தையும் பொன்னிறமாக வறுக்கவும். ஏற்கெனவே வதக்கி வைத்த கறிவேப்பிலையுடன் இதையும் சேர்த்து வைக்கவும்.
இவை அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் புளியையும் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி, கலவையுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைக்கவும்.மறுபடியும் அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், அதில் கடுகு சேர்த்து தாளித்ததும், மசாலா கரைசலை சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி சேர்க்கவும். சிறிது நேரம் இதனை கொதிக்க விட்டால் போதும். சுவையான கறிவேப்பிலை குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“