ஒரு முறை இப்படி கருணைக்கிழங்கு வைத்து காரக்குழம்பு செய்துபாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கருணைக்கிழங்கு – ¼ கிலோ
1 கை வெங்காயம்
1 கை தக்காளி நறுக்கியது
புளி எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
மிளகாய் தூள் 2 ஸ்பூன்
மல்லித்தூள் 3 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
1 ஸ்பூன் வெந்தயம்
பூண்டு ஒரு கை
கருவேப்பிலை 2 கொத்து
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். தொடர்ந்து கடுகு, மிளகாய், வெந்தயம் சேர்க்கவும். கருவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து வெங்காயம், தக்காளி சேர்க்கவும். தொடர்ந்து பூண்டு சேர்க்கவும். தொடர்ந்து கருணைக்கிழங்கு அவித்ததை சேர்த்து கிளரவும். தொடர்ந்து புளி தண்ணீர் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகு தூளை கொஞ்சம் தண்ணீர் விட்டு கலந்து சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து நன்றாக எண்ணெய் வெளியாகும் வரை கிளரவும்.