மல்லூர் சிக்கனை செஃப் தாமு சொல்வது போல் செய்து பாருங்க. வெறும் 10 நிமிடத்தில் செய்திடலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் அரை கிலோ
வத்தல் 10
1 கப் வெங்காயம்
இஞ்சி – பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
1 ஸ்பூன் சோம்பு
1 கொத்து கருவேப்பிலை
2 ஸ்பூன் மல்லித்தூள்
1 ஸ்பூன் மிளகுத்தூள்
1 கரண்டி எண்ணெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில், சோம்பு , கருவேப்பில்லை சேர்த்து கிளரவும். கொஞ்சம் வெங்காயம் சேர்க்கவும். தொடர்ந்து வத்தலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். தொடரந்து சிக்கனை சேர்த்து கிளரவும். தொடர்நது இதில் உப்பு, கொஞ்சம் மிளகாய் தூள் சேர்த்து கிளரவும். 4 நிமிடங்கள் கழித்து மல்லித்தூள் சேர்த்து கிளரவும். தொடர்ந்து தண்ணீரை கொஞ்சமாக தெளிக்க வேண்டும். சிக்கன் வேகும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து மிளகுத் தூள் சேர்த்து கிளரவும். 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“