செப் தாமு சொன்ன மாதிரி பீர்க்கங்காய் கடையல் செய்யுங்க. சமைப்பது ரொமபவே ஈசி
தேவயான பொருட்கள்
அரை ஸ்பூன் கடகு
அரை ஸ்பூன் கடலை பருப்பு
கால் ஸ்பூன் சீரகம்
வத்தல் 2
1 கொத்து கருவேப்பிலை
2 பெரிய வெங்காயம் நறூக்கியது
2 தக்காளி நறுக்க வேண்டும்
400 பீர்க்கங்காய்
2 டீஸ்ன் குழம்பு மிளகாய் தூள்
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
நெல்லிக்காய் அளவு புளி
செய்முறை : பீர்க்கங்காய்யை வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் சேர்த்து கிளரவும். இதில் வத்தல் சேர்க்கவும். தொடர்ந்து வெங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து கிளரவும். பீர்க்கங்காய் சேர்த்து கிளரவும். இதில் குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கிளர வேண்டும். கொஞ்சம் வெந்ததும், நெல்லிக்காய் புளியை கரைத்து சேர்த்து கிளரவும். நன்றாக வேக வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“