வீட்டில் இனி உருளைக்கிழங்கு வறுவல், இப்படி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும். செஃப் தாமு ரெசிபி
தேவையான பொருட்கள்
10 உருளைக்கிழங்கு
1 வெங்காயம் நறுக்கியது
உப்பு
பொறிக்கும் அளவு எண்ணெய்
5 வத்தல்
2 கொத்து கருவேப்பிலை
அரை ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுந்தம் பருப்பு
8 பூண்டு இடித்தது
1 ஸ்பூன் மிளகாய் பொடி
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
செய்முறை: உருளைக்கிழங்கை, கொதிக்கும் நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். தொடர்ந்து எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து கிளரவும். தொடர்ந்து பொறித்து எடுத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளரவும். வேண்டும் என்றால் இட்லி மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“