தீபாவளி என்றாலே பலகாரங்களுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக இனிப்பு வகைகள் அதிகமாக செய்யப்படும். ஸ்வீட்களில் நிறைய வெரைட்டி இருந்தாலும், நிறைய பேருக்கு பிடித்த ஸ்வீட் மைசூர்பாக். வாயில் போட்டால் கரையும் நிலையில் இருக்கும் மைசூர்பாக்கை எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.
Advertisment
பொதுவாக மைசூர்பாக் செய்ய அதிக நெய் தேவைப்படும். ஆனால் நெய் இல்லாமல், கடலை எண்ணெய்யிலே சாஃப்ட்டான டேஸ்டியான மைசூர்பாக் செய்யலாம். செஃப் தாமு பகிர்ந்துள்ள சிம்பிள் ரெசிபியை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்
கடலை எண்ணெய் – 1 கப்
சர்க்கரை – 1½ கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். நன்றாக கலக்கிய பின்னர் அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.
அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு சேர்த்து, கடலை எண்ணெய் அரை கப் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கிக் கொள்ள வேண்டும்.
மறுபுறம் சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வந்தப் பிறகு கடலை மாவை அதில் சேர்த்து கிளற வேண்டும். சிறிது நேரம் கழித்து மீதமுள்ள கடலை எண்ணெய்யை சேர்த்து கிளற வேண்டும்.
நன்றாக வெந்து பதத்திற்கு வந்த உடன் எடுத்து ஒரு தட்டில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் மேல் சிறிதளவு எண்ணெய் மற்றும் சர்க்கரையை தூவிக் கொள்ள வேண்டும்.
சிறிது நேரம் ஆறிய பின்னர், தேவையான வடிவில் கட் செய்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சாஃப்ட்டான டேஸ்டியான மைசூர்பாக் ரெடி. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“