செப் தீனா சொன்ன மாதிரி தேங்காய் பால் அல்வா செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா 250 கிராம்
தேங்காய் 1
சர்க்கரை 250 கிராம்
தேங்காய் எண்ணெய் 150 எம்.எல்
பாதாம் தேவையான அளவு
முக்கால் லிட்டர் தண்ணீர்
செய்முறை: மைதா மாவை சப்பாத்தி மாவு போல் பிசைந்து அதில் தண்ணீர் சேர்த்து ஊற வக்கவும். 6 மணி நேரம் ஊறவைக்கவும். தொடர்ந்து நாம் மாவை மெதுவாக மிக்ஸ் செய்து பாலை எடுக்கவும். தொடர்ந்து மைதா ஜவ்வை தனியாக எடுக்கவும். இந்த மைதா பாலை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் இந்த பாலை 7 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து மேலாக அதன் தண்ணீர் இருக்கும் அதை நீக்க வேண்டும். தொடர்ந்து அதன் பாலை எடுக்கவும். தொடர்ந்து தேங்காயில் இருந்து பால் எடுத்து, இதை மாதா பாலில் சேர்க்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் இதை சேர்த்து, சர்க்கரை சேர்த்ததும் அடுப்பை ஆன் செய்யவும். தொடர்ந்து கிளற வேண்டும். தொடர்ந்து தேங்காய் எண்ணெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். தொடர்ந்து பாதாம் நறுக்கியதை சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“