ஒரு முறை வீட்டில் இப்படி ஜவ்வரிசி வைத்து, செப் தினா சொல்வது போல் பாயாசம் வைத்து சாப்பிடுவீங்க.
தேவையான பொருட்கள்
150 ஜவ்வரிசி
4 கப் தண்ணீர்
நாட்டுச் சக்கரை 100 கிராம்
கட்டியான தேங்காய் பால் 150 எம்.எல்
ஏலக்காய் தூள் அரை ஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி சேர்த்து அதில், 2 கிளாஸ் தண்ணீர் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, அதில் ஊறவைத்த ஜவ்வரிசியில் தண்ணீரில்லாமல் சேர்க்கவும். தொடர்ந்து இதை 12 நிமிடங்கள் வேக வக்கவும். தொடர்ந்து இதில் அதிக தண்ணீர் அதை மற்றும் நீக்கவும். தொடர்ந்து அதில் நாட்டுச் சக்கரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து நன்றாக கிளரவும். தேங்காய் பாலை சேர்த்தவுடன் அடுப்பை அணைக்கவும். கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“