இந்த மைசூர் சிக்கன் மசாலாவை, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும். செப் தீனாவின் சூப்பர் ரெசிபி;.
தேவையான பொருட்கள்
சிக்கன் 1 கிலோ
வெங்காயம் 3
தக்காளி 2
பச்சை மிளகாய் 4
இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
முழு கரம் மசாலா ( கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை)
ஜாவித்திரி 2
மஞ்சள் தூள் சிறிதளவு
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
மல்லிப் பொடி 1 ¼ ஸ்பூன்
கருவேப்பிலை 1 கொத்து
தேங்காய் 3 துண்டு
முந்திரி 10
எண்ணெய்
உப்பு
செய்முறை : மிக்ஸியில் துருவிய தேங்காய், சோம்பு, முந்திரி, பச்சை மிளகாய், ஜாவித்திரி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் மற்றும் தண்னீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து வெங்காயம் நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து இஞ்சி – பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளரவும். தொடர்ந்து மஞ்சள் பொடி, மல்லித்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து தக்காளியை சேர்க்கவும். தொடர்ந்து தேங்காய், முந்திரி அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக கிளரவும். 7 நிமிடங்கள் கழித்து இதில் சுத்தம் செய்த சிக்கனை சேர்க்கவும். தொடந்து இதை நன்றாக கிளரவும். தற்போது இதை மூடி போட்டு வேகவைக்கவும்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“