செஃப் தீனா சொல்லும் சாஃப்ட் சப்பாத்தி ரகசியம் மற்றும் அது செய்வது பற்றி பார்ப்போம்.
Advertisment
கோதுமை மாவு- 200 கிராம் உப்பு- தேவையான அளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வீட்டில் அரைத்த கோதுமை மாவு எடுத்து அதில் கொஞ்சம் உப்பு, தண்ணீர் சேர்த்து பிசையவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். பின் நன்கு பிசைந்து 1,2 மடிப்பாக பிசைய வேண்டும்.
அதன் பின் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து பிசைந்து மடித்து பிசையவும். பின்னர் மீண்டும் எண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்கவும். காட்டன் துணி போட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். இப்போது சப்பாத்தி மாவு இலகுவாக சாஃப்ட்காக இருக்கும்.
இப்போது மாவை கைகளால் பிய்த்து உருண்டை தயார் செய்யவும். உள்ளங்கைகளால் சப்பாத்தி உருண்டை எண்ணெய் இல்லாமல் திரட்டவும். இப்போது கோதுமை மாவு எடுத்து அதில் இந்த சப்பாத்தி உருண்டையை தொட்டு சப்பாத்தி கட்டையால் தேய்க்கவும்.
மீடியமான சைஸில் இருக்க வேண்டும். இதன்பின், அடுப்பில் சப்பாத்தி கல் வைத்து அதில் எண்ணெய் சேர்க்காமல் சப்பாத்தி போடவும். ஆனால் அதற்கு முன்னதாகவே 2-3 ட்ராப் எண்ணெய் தடவி வைக்க வேண்டும். இப்போது சப்பாத்தி போட்டு எடுத்தால் நல்ல சாஃப்ட் ஆன சப்பாத்தி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news